33.3 C
Chennai
Saturday, May 18, 2024
cake christmas
கேக் செய்முறை

மிகவும் சிம்பிளான எக்லெஸ் கேக்: கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்

உங்கள் வீட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு கேக் செய்ய மைக்ரோ ஓவன் இல்லையா? கவலையை விடுங்கள். ஏனெனில் அடுப்பிலேயே எளிமையாக கேக் செய்யலாம். அதிலும் முட்டை சேர்க்காமல் அருமையாக கேக் செய்து சாப்பிடலாம்.

இங்கு அடுப்பிலேயே எப்படி எக்லெஸ் கேக் செய்வதென்று தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அதன்படி செய்து சுவைத்துப் பாருங்கள்.

Christmas Special: Simple Eggless Cake Recipe Without Oven
தேவையான பொருட்கள்:

மைதா – 1 கப் + 1 டேபிள் ஸ்பூன்
கண்டென்ஸ்ட் மில்க் – 1/2 கப்
சர்க்கரை பொடி – 1/4 கப்
முந்திரி – 1 டேபிள் ஸ்பூன்
உலர் திராட்சை – 1 டேபிள் ஸ்பூன்
பேக்கிங் சோடா – 1/4 டீஸ்பூன்
வெண்ணெய் – 1/4 கப் + 1 டேபிள் ஸ்பூன்
பால் – 1/2 கப்
உப்பு – 1 கப்

செய்முறை:

முதலில் பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா மற்றும் மைதா ஆகியவற்றை சலித்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் சர்க்கரை பொடி மற்றும் 1/4 கப் வெண்ணெய் சேர்த்து நன்கு மென்மையாகும் வரை அடித்துக் கொள்ள வேண்டும்.

Christmas Special: Simple Eggless Cake Recipe Without Oven
பிறகு ஒரு பௌலில் கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். பின் அதில் 1/4 கப் பால் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.

Christmas Special: Simple Eggless Cake Recipe Without Oven
அடுத்து குக்கரை அடுப்பில் வைத்து, அதில் உப்பை பரப்பி விட்டு, குக்கரை சிறிது நேரம் மூடி சூடேற்ற வேண்டும்.

உப்பு சூடாவதற்குள், அடித்து வைத்துள்ள கண்டென்ஸ்டு மில்க் கலவையில் மைதா கலவையை சேர்த்து, மீதமுள்ள பால் ஊற்றி கட்டிகள் சேராதவாறு நன்கு அடித்து, முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின் பேக்கிங் பௌலில் 1 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் தடவி, பின் 1 டேபிள ஸ்பூன் மைதாவை தூவி, அதன் மேல் கலந்து வைத்துள்ள கலவையை ஊற்றி குக்கரை மூடி, விசில் போடாமல், குறைவான தீயில் 30-40 நிமிடம் பேக் செய்ய வேண்டும்.

Christmas Special: Simple Eggless Cake Recipe Without Oven
பிறகு கேக் நன்கு வெந்துவிட்டதா என்று பார்க்க வேண்டும். கேக் நன்கு வெந்துவிட்டால், கத்தி கொண்டு குத்தும் போது அதில் மாவு ஒட்டாமல் இருக்கும். பின் அடுப்பை அணைத்து, குக்கரில் உள்ள பேக்கிங் பௌலை வெளியே எடுத்து குளிர வைக்க வேண்டும்.

Christmas Special: Simple Eggless Cake Recipe Without Oven
இறுதியில் அதனை ஒரு தட்டில் போட்டு, கத்தி கொண்டு வெட்டினால், எக்லெஸ் கேக் ரெடி!!!

Related posts

எக்லெஸ் கேரட் கேக்

nathan

ருசியான சாக்லேட் கேக் தயார்…

sangika

பிளாக் ஃபாரஸ்ட் கேக்

nathan

மேங்கோ கேக்

nathan

சாக்லெட் பிரெளனி

nathan

சாக்லேட் கேக்

nathan

(முட்டை சேர்க்காத‌) வெனிலா கேக்

nathan

கேரட் கேக் வித் சாக்லெட் ட்ரஃபிள்

nathan

பலாப்பழ கேக்

nathan