33.3 C
Chennai
Saturday, May 18, 2024
wheat bonda 1635164646
சிற்றுண்டி வகைகள்

சுவையான கோதுமை போண்டா

தேவையான பொருட்கள்:

* கோதுமை மாவு – 1 கப்

* அரிசி மாவு – 1/4 கப்

* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)

* இஞ்சி – 1 டீஸ்பூன் (துருவியது)

* கறிவேப்பிலை – சிறிது (பொடியாக நறுக்கியது)

* புதினா – 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

* உப்பு – சுவைக்கேற்ப

* பேக்கிங் சோடா – 1/2 டீஸ்பூன்

* தண்ணீர் – தேவையான அளவு

* எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, புதினா, பேக்கிங் சோடா, சுவைக்கேற்ப உப்பு ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் அதில் தேவையான அளவு நீரை ஊற்றி, போண்டா பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

* எண்ணெய் சூடானதும், பிசைந்து வைத்துள்ள மாவை போண்டா போன்று உருட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

* இதேப் போல் அனைத்து மாவையும் எண்ணெயில் பொரித்து எடுத்தால், சுவையான கோதுமை போண்டா தயார்.

Related posts

சுவையான வெண்டைக்காய் பக்கோடா

nathan

ஜீரண சுரப்பிகளின் செயலை அதிகரிக்க செய்யும் இஞ்சி துவையல்

nathan

வாழைத்தண்டு துவையல் செய்வது எப்படி?

nathan

ஆப்பிள் பஜ்ஜி

nathan

உடலுக்கு பலம் தரும் – கம்பு தோசை

nathan

ராகி பால் கொழுக்கட்டை

nathan

பழநி பஞ்சாமிர்தம்

nathan

மரவள்ளிக்கிழங்கு வடை

nathan

உண்டி ஸ்டஃப்டு

nathan