33.3 C
Chennai
Saturday, May 18, 2024
26 1448519303 7 pineapple
சரும பராமரிப்பு

அக்குளில் இருக்கும் கருப்பைப் போக்குவதற்கான சில எளிய வழிகள்!!!

உங்கள் அக்குள் கருமையாக உள்ளதா? இதனால் உங்களால் ஸ்லீவ்லெஸ் உடைகளை அணிய முடியவில்லையா? கவலைப்படாதீர்கள். இதனை சில எளிய இயற்கை வழிகளின் மூலம் நீக்கலாம். அதிலும் மிகவும் குறைந்த விலையிலேயே கிடைக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளைக் கொண்டே அக்குள் கருமையை எளிதில் போக்கலாம்.

ஆனால் அப்படி பழங்கள் மற்றும் காய்கறிகளைக் கொண்டு அக்குளைப் பராமரித்த பின், அக்குளில் டியோடரண்ட் அல்லது பெர்ஃப்யூம் அடிப்பதைத் தவிர்க்க வேண்டும். அதே சமயம் வெதுவெதுப்பான நீரில் நல்ல குளியலை மேற்கொண்டு, அக்குளை இறுக்காத அளவில் தளர்வான உடைகளை அணிய வேண்டும்.

சரி, இப்போது அக்குளில் உள்ள கருமையைப் போக்குவது எப்படி என்று பார்ப்போமா!!!

எலுமிச்சை

எலுமிச்சையில் ப்ளீச்சிங் தன்மை உள்ளது என்பது அனைவரும் அறிந்தது தான். அத்தகைய எலுமிச்சையை இரண்டாக வெட்டி, அக்குளில் மசாஜ் செய்து உலர வைக்க வேண்டும். பின் மீண்டும் இச்செயலை செய்து உலர்ந்ததும், குளிர்ந்த நீரின் மூலம் கழுவ வேண்டும். இப்படி மாதம் இரண்டு முறை செய்து வந்தால் அக்குள் கருமையைப் போக்கலாம்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய் வெறும் குளிர்ச்சியை மட்டும் உள்ளடக்கியதில்லை, ப்ளீச்சிங் தன்மையையும் கொண்டது. அதற்கு வெள்ளரிக்காயைக் கொண்டு அக்குளை மசாஜ் செய்து உலர்ந்ததும், தயிரைத் தடவி 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி அடிக்கடி அல்லது தினமும் செய்து வந்தால், அக்குள் கருமையை விரைவில் போக்கலாம்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கை அரைத்து அதனை அக்குளில் தடவி 15 நிமிடம் நன்கு உலர வைத்து, பின் அதனை ஈரத்துணியால் துடைத்து எடுத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வர, நல்ல மாற்றத்தை நீங்கள் காண்பீர்கள்.

ஆரஞ்சு

ஆரஞ்சு தோலை உலர வைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். பின் சிறிது ஆரஞ்சு பொடியை எடுத்து, அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்து, அக்குளில் தடவி 15 நிமிடம் உலர வைத்து கழுவ, அக்குள் கருமை நீங்கும்.

ஆப்பிள்

ஆப்பிளை அரைத்து, அதனை அக்குளில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி செய்வதால், ஆப்பிளில் உள்ள புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் அக்குள் பகுதியில் உள்ள செல்களுக்கு கிடைத்து, அக்குள் கருமை நீங்கும்.

தக்காளி

தக்காளியை அரைத்து பேஸ்ட் செய்து, அக்குளில் தடவி உலர வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், அக்குள் கருமை அகலும்.

அன்னாசிப்பழம்

அன்னாசிப்பழத் துண்டுகளைக் கொண்டு அக்குளை 10 நிமிடம் மசாஜ் செய்து, சிறிது நேரம் ஊற வைத்து, நன்கு உலர்ந்ததும், பாலை காட்டனில் நனைத்து, அப்பகுதியை துடைத்து எடுக்க வேண்டும். இப்படி வார இறுதியில் செய்து வந்தால், அக்குளில் உள்ள கருமையைப் போக்கலாம்.

26 1448519303 7 pineapple

Related posts

முதுகு அழகு பெற…

nathan

கருமையான சருமத்தை வெண்மையாக்க சில அட்டகாசமான வழிகள்!!!

nathan

மேனி வறண்டுபோகாமல் இருக்க டிப்ஸ்..

nathan

ப்ராவினால் உண்டாகும் தழும்பை எப்படி மறையச் செய்யலாம்?

nathan

பெண்களுக்கான சின்ன..சின்ன டிப்ஸ்..அழகு குறிப்புகள்

nathan

உங்கள் சருமம் வறண்டிருக்கா? இதோ அட்டகாசமான பொலிவை தரும் ஓட்ஸ் ரெசிபிகள்!!

nathan

மையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு சருமத்தைப் பராமரித்து வந்தாலே சரும அழகை மேம்படுத்தலாம்.

nathan

ஆலிவ் எண்ணெயின் சரும பலன்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

nathan

இந்த கலவையை உங்கள் மூக்கில் தடவி 30 நிமிடங்கள் ஊற வைத்தால் . . .

nathan