33.3 C
Chennai
Saturday, May 18, 2024
O7F5e64
ஐஸ்க்ரீம் வகைகள்

சாக்லெட் – சிப்ஸ் மஃபின்ஸ்

என்னென்ன தேவை?

மைதா – 1 கப்,
கோதுமை மாவு – 1 கப்,
பேக்கிங் பவுடர் – 1 1/2 டீஸ்பூன்,
ஆப்ப சோடா – 1/2 டீஸ்பூன்,
பொடியாக்கிய சர்க்கரை – 1 கப்,
பழுத்த வாழைப்பழம் – 2,
ஃப்ளேக்ஸ் ((Flax) விதை பவுடர் – 2 டேபிள்ஸ்பூன் (இப்போது பெரிய கடைகளில் கிடைக்கிறது. 8 டேபிள்ஸ்பூன் தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும்),
உப்பு – 1/2 டீஸ்பூன்,
பட்டைத் தூள் – 1/4 டீஸ்பூன்,
வெண்ணெய் அல்லது சமையல் எண்ணெய் – சிறிது,
வெறும் கடாயில் வறுத்து உடைத்த வால்நட் – 1/2 கப்.

எப்படிச் செய்வது?

முதலில் மைதா, கோதுமை, ஆப்ப சோடா, பேக்கிங் பவுடர், உப்பு, பட்டைத் தூள், சர்க்கரை பவுடர் ஆகியவற்றை நன்கு சலித்து, ஒரு பவுலில் வைக்கவும். ஃப்ளேக்ஸ் கரைத்த தண்ணீரில் வாழைப் பழத்தைப் போட்டு விழுதாகக் கடைந்து வைக்கவும். பின் கொஞ்சம் கொஞ்சமாக மாவு கலவை, பழக்கலவை இரண்டையும் கட்டி இல்லாமல் கலந்து, அதில் கொஞ்சம் உடைத்த வால்நட்ஸ் சேர்க்கவும். வெண்ணெய் அல்லது எண்ணெய் பூசிய மஃபின்ஸ் கப்புகளில் 3/4 பாகம் இந்தக் கலவையை ஊற்றி, அதன் மேல் சிறிது உடைத்த வால்நட்ஸை தூவி பேக் செய்யவும். 15-20 நிமிடங்களில் வெந்து விடும். பின் ஆற வைக்கவும்.

அலங்கரிக்க…

சிறிது வெண்ணெய், உடைத்த சாக்லெட் சேர்த்து உருக்கி, சாக்லெட் சாஸாக தயார் செய்து Muffins மேல் ஊற்றி சாக்லெட் சிப்ஸ் அல்லது சாக்லெட் துருவல் தூவிப் பரிமாறவும்.O7F5e64

Related posts

பைனாபிள் – செர்ரி ஜஸ்க்ரீம்

nathan

கோக்கோ ஐஸ்கிரீம்

nathan

ஆரஞ்சு – ஸ்ட்ராபெர்ரி பாப்சிகிள்

nathan

சாக்லெட் ஐஸ்க்ரீம் பீட்சா

nathan

பிஸ்தா ஐஸ்கிரீம்

nathan

சாக்லேட் ஐஸ்கிரீம்

nathan

மாம்பழ ஐஸ்க்ரீம்

nathan

அசல் மாம்பழத்தின் சுவையில் பர்ஃபி செய்வது எப்படி?தெரிஞ்சிக்கங்க…

nathan

மேங்கோ குல்ஃபி

nathan