1371600410151
கேக் செய்முறை

இதோ சுவையான சாக்லெட் புடிங்

தேவையான பொருட்கள்

சாக்லெட் – 50 கிராம்,
சர்க்கரை – 1/2 கப்
கோகோ பவுடர் – 2 டேபிள்ஸ்பூன்
அரிசி மாவு – 1 டேபிள்ஸ்பூன்
கார்ன்ஃப்ளோர் – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – 1/4 டீஸ்பூன்
பால் – 2 கப்
ஹெவி கிரீம் – 40 மி.லி.

செய்முறை

சாக்லெட்டை துருவிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பால், சர்க்கரை, கோகோ பவுடர், அரிசி மாவு, கார்ன்ஃப்ளோர், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். மிதமான தீயில், கடாயில் கலவையை ஊற்றி கைவிடாமல் கிளறவும்.

சிறிது கெட்டியாக ஆனதும், துருவிய சாக்லெட்டை சேர்த்து கிளறவும். இக்கலவை பாதியாக வரும்வரை கைவிடாமல் கிளறி, ஹெவி கிரீம், வெனிலா எசென்ஸ் சேர்த்து இறக்கவும்.

ஒரு கிண்ணத்தில் போட்டு ஆறவிடவும். ஆறியதும் ஃப்ரிட்ஜில் வைத்து செட் செய்து, துருவிய வெள்ளை சாக்லெட்டால் அலங்கரித்து பரிமாறவும்.

சுவையான சாக்லெட் புடிங் தயார்…1371600410151

Related posts

பனீர் கேக்

nathan

கூடை கேக்

nathan

ஸ்பாஞ்ச் கேக் : செய்முறைகளுடன்…!​

nathan

ஸ்பெஷல் பேரீச்சம்பழ கேக்

nathan

ருசியான பேரீச்சம்பழ கேக் வீட்டிலேயே செய்யலாம்….

sangika

தேங்காய் கேக்

nathan

அரிசி மாவு கேக்

nathan

முட்டை சேர்க்காத ஃப்ரூட் கேக்

nathan

சாக்லெட் ஸ்பான்ஞ் கேக்

nathan